20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 4 கடைகளுக்கு தலா ரூ.5௦௦ வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-06-30 15:15 GMT

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள்  திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல் பஸ் நிலையம், நாகல்நகர், கடைவீதி, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 4 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 20 கிலோ பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 4 கடைகளுக்கும் தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு தடை செய்த பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்