விழுப்புரம் பகுதியில்தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-07 18:45 GMT

விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் காகுப்பம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் தங்கமணி (வயது 27), ஆனாங்கூர் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ் (30) என்பதும், இவர்கள் இருவரும் விழுப்புரம் சாலாமேட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் சீத்தாராமன் ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தங்கமணி, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 2½ பவுன் நகையை மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரையும், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்