பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தளவாபாளையம் அருகே உள்ள கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 31). இவர் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது காவிரி பாலத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்த கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமிகோவில் தெருவைச் சேர்ந்த மதன் (26), தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (24) ஆகியோர் ராஜசேகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, மதன், நாகேந்திரனை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.