போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

மேட்டுப்பாளையத்தில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-09 18:45 GMT

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ்காரர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 31). இவர், கோவைப்புதூர் பட்டாலியனில் (ஏ-பிரிவு) 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்த விக்னேஷ், நேற்று முன்தினம் மாலையில் சென்னைக்கு செல்ல மேட்டுப்பாளையத்துக்கு வந்தார்.

பின்னர் அவர், பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அவர், இரவு நேரம் ஆகிவிட்டதாலும், போதை அதிகமானதாலும் அண்ணாஜிராவ் ரோட்டில் உள்ள பெண்கள் பள்ளி அருகில் படுத்து தூங்கிவிட்டார்.

கொலைமிரட்டல்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள், விக்னேஷை எழுப்பி, ஏன் இங்கே படுத்து இருக்கிறீர்கள் என்று கேட்டு உள்ளனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமிகள், விக்னேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதை கண்ட ஆட்டோ டிரைவர் ஆஷிக் என்பவர் அவர்களை தடுத்து நிறுத்தி விக்னேஷை மீட்டார். காயம் அடைந்த விக்னேஷ், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 பேர் கைது

அவர் கொடுத்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரர் விக்னேஷை தாக்கிய வெள்ளிப்பாளையம் ரோடு சீரங்கராயன் ஓடையை சேர்ந்த தொழிலாளி கவின் என்ற கருப்பசாமி(20), சிறுமுகை ரோடு வ.உ.சி. வீதியை சேர்ந்த விவேகானந்தன் என்ற சக்திவேல்(21) ஆகிய 2 பேரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்