தொழிலாளிக்கு 2½ ஆண்டு ஜெயில்

நாலாட்டின்புத்தூரில் தாய், மகனை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2023-03-14 18:45 GMT

கோவில்பட்டி:

நாலாட்டின்புத்தூரில் தாய், மகனை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தொழிலாளி

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் வி.பி.சிந்தன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 59). கட்டிடத் தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி ராமலட்சுமி (வயது 52). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமலட்சுமி, பாலகிருஷ்ணனின் மகன் சமுத்திர பாண்டிக்கு பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்துள்ளார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அந்த தம்பதியினர் பிரிந்தனர். இதற்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த ராமலட்சுமி தான் காரணம் என பாலகிருஷ்ணன் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

அரிவாள் வெட்டு

கடந்த 6.1.2019-ந்தேதி மாலையில் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த ராமலட்சுமியை அந்த வழியாக வந்த பாலகிருஷ்ணன் வசைபாடியுள்ளார். இதனை ராம லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து, ராமலட்சுமியை வெட்டியுள்ளார். இதனை தடுத்த அவரது மகன் விக்னேஷூவுக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த ராமலட்சுமிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில ்சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

ஜெயில் தண்டனை

இதுதொடர்பான வழக்கு கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரத்தினவேல்பாண்டியன், தொழிலாளி பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை யும், ஆயுதத்தால் தாக்கியதற்கு மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்