சாராயம் விற்ற 2 பெண்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாட்டறம்பள்ளி பகுதியில் சாராயம் விற்ற 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் சாமகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 38). மற்றும் அதேப் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மனைவி அம்சா (52). ஜெயலட்சுமி மற்றும் அம்சா ஆகிய இருவரும் அதே பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாக நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் அவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர்களை குண்டர்தடுப்பு சட்டத்தில்கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.