கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-09-11 19:00 GMT

ராயக்கோட்டை;-

கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் உத்தனப்பள்ளி- சூளகிரி சாலையில் தேவசானப்பள்ளி அரசு பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கனிம வள அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்