2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-07-26 18:26 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி வட்டம் நடுபட்டரை கிராம பகுதியில் இருந்து தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் வாணியம்பாடி தாசில்தார் சம்பத் உத்தரவின் பெயரில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் வருவாய்த் துறையினர், நடுபட்டறை பகுதிக்குச் சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சுடுகாடு முட்புதரில் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்துவதற்காக பொது விநியோக திட்ட அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி இடத்தில் ஆய்வு செய்த போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதுவிநியோக திட்ட இலவச அரிசி சுமார் 2,100 கிலோ கைப்பற்றப்பட்டது.

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையினருக்கு, வருவாய் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர்,

மேலும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி வாணியம்பாடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்