2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-23 14:07 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே பாட்டவயல் தமிழக-கேரள எல்லையில் உள்ளது. ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்துவதை தடுக்கவும், கண்காணிக்கவும் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் கல்பட்டாவுக்கு வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். டிரைவர் செரீப் உசேன் (வயது 52) என்பவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தில் சோதனை செய்த போது, 2 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து லாரி மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செரீப் உசேனை போலீசார் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்