பொது இடத்தில் மது அருந்திய 2 வாலிபர்கள் கைது
ஜோலார்பேட்டை பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஜோலார்பேட்டை விளையாட்டு மைதானம் அருகே பொது மக்களுக்கு இடையூராக மற்றும் பொது இடத்தில் மது அருந்திய நடுவூர் பகுதியை சேர்ந்த தினகரன் என்பவரின் மகன் ஹரிஹரன் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் (24) என்பவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே பொது மக்களுக்கு இடையூராக, பொது இடத்தில் மது அருந்தியதாக கைது செய்யப்பட்டார்.