2 மின்கம்பங்களை அகற்ற வேண்டும்
நாகையில், முறிந்து விழும் நிலையில் உள்ள 2 மின்கம்பங்களை அகற்ற வேண்டும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிப்பாளையம்:
நாகை புதிய பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள டாஸ்மாக் கடை எதிரில் 2 மின்கம்பங்களின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பங்களின் அருகில் தான் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்வார்கள். அப்போது மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு முறிந்து விழும் நிலையில் உள்ள 2 மின்கம்பங்களையும் அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.