பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Update: 2023-07-21 20:17 GMT

பேராவூரணியில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். உடனடியாக போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி துவாக்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது50) என்பதும், அவர் பேராவூரணியில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பேராவூரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

கைது

தப்பி ஓடியவர் தஞ்சையை அடுத்த நெடார் மீனாட்சி நகரை சேர்ந்த தியாகராஜன் (70) என்பதும், அவர் பேராவூரணியில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவரை தஞ்சை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்