வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-07-23 21:16 GMT

திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலையில் வசித்து வருபவர் தினேஷ் குமார் (வயது 23). இவர் மதுரை முத்துப்பட்டி பைக்கரா வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.இவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தினேஷ்குமாரை வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது.

மேலும் அவர்கள் தினேஷ் குமார் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (29), ஆனந்தன் (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்