ஆயுதங்களுடன் பதுங்கிய 2 பேர் கைது
மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகுபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வாளுடன் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்தனர். அவர், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் (வயது33) என்பதும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுபோல், மதுரை திடீர்நகர் பகுதியில் வாளுடன் பதுங்கிய 16 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.