முன்விரோத தகராறில் தாய்-மகன் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது

கரூர் அருகே முன்விரோத தகராறில் தாய்-மகன் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-03 19:07 GMT

முன்விரோத தகராறு

கரூர் அருகே உள்ள மரவாப்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வா (வயது 35). இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று விஸ்வா மற்றும் அவரது தாயார் இந்திரவாணி ஆகியோரும் நெரூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள திருமணமண்டபம் அருகே உட்கார்ந்து இருந்தனர்.

அப்போது அங்கு வந்த சுரேஷ், சக்திவேல், மற்றொருவர் என 3 பேரும் சேர்ந்து முன்விரோதம் தொடர்பாக விஸ்வா மற்றும் அவரது தயார் இந்திராணி ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி தகராறில் ஈடுபட்டனர்்.

2 பேர் கைது

அப்போது விஸ்வாவின் மூக்கை கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து காயம் அடைந்த தாய்-மகனை அங்கிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து, சுரேஷ் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்