மளிகை கடைகளில் பதுக்கி வைத்த ரூ.35 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

மளிகை கடைகளில் பதுக்கி வைத்த ரூ.35 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-05 18:45 GMT

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 74), பிரபாகரன் (57) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடமிருந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்