செம்மண் கடத்திய 2 பேர் கைது

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-10-26 18:45 GMT

களியக்காவிளை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கோழிவிளை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த பகுதியில் சிலர் எந்திரம் மூலம் செம்மண்ணை அள்ளி டெம்போவில் கடத்தி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் டெம்போ டிரைவர் ரோய் (வயது 44), கிட்டாச்சி எந்திர ஆபரேட்டர் அபிஷ் (26) ஆகியோர் சிக்கினர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து எந்திரங்களை பறிமுதல் செய்ததோடு 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நில உரிமையாளர் ஜெயராஜ், டிரைவர் விஜில்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்