அரிவாளுடன் வந்த 2 பேர் கைது

சிவகாசியில் அரிவாளுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-01 18:53 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வடமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருத்தங்கல் பகுதியை சேர்ந்த மகாராஜன் என்கிற வெள்ளையன் (வயது 29), கணேசன் என்கிற கட்டையன் கணேசன் (32) ஆகியோர் வீச்சு அரிவாளுடன் நின்றிருந்தனர். சந்தேகத்தின் பேரில் திருத்தங்கல் போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்