கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

பெரியகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-30 18:45 GMT

பெரியகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் எ.புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த அழகர் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கிலோ 175 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கும்பக்கரை சாலையில் கீழவடகரையை சேர்ந்த வாசுதேவன் (43) என்பவர், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்