பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே தெளி கிராமத்தில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்ததாக அதே கிராமத்தைச்சேர்ந்த சசிக்குமார் (வயது 35), கன்னியப்பன் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.