விருத்தாசலத்தில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

விருத்தாசலத்தில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-12-30 18:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் செயின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் மணவாளநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்தீப் சிங் (வயது 26) மற்றும் நிர்மல் சிங் (33) என்பதும், விருத்தாசலத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து சாக்கு மூட்டைகளில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குல்தீப்சிங் உள்பட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 400 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்