புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் பாவந்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்களில் வேகமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இ்தையடுத்து அவர்கள் 2 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் மடப்பட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 34), சித்தானங்கூர் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.