பஸ்சில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

பஸ்சில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-04 18:45 GMT

வளவனூர், 

விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஜியாவுதீன் (வயது 47), ராமமூர்த்தி (57) ஆகியோர் 5 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜியாவுதீன், ராமமூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்