புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-19 18:42 GMT

பெருங்களூர் பழைய கடைவீதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட சிறப்பு போதை தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெருங்களூர் தெற்கு தெருவை சேர்ந்த அகிலன் (வயது 54), தமிழரசு (64) ஆகியோரது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஆதனக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.2,700 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்