சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர்.அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 30) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, அதேபகுதியில் வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்ற சக்திவேல் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தலா 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.