மேச்சேரி:
மேச்சேரி அருகே மல்லிகுந்தம் பகுதியில் அதிக போதை தரும் பொருட்களை கலந்து மது விற்றதாக பழனி என்பவருடைய மனைவி தங்கம் (வயது 50) என்பவரை மேச்சேரி போலீசார் கைது செய்தனர். அதேபோல் பச்சக்காட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஆறுமுகத்திடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.