மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-18 19:01 GMT

குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை, வைப்புதூர் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் குளித்தலை போலீசார் மேற்கண்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அய்யனூர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 45), குட்டப்பட்டி சேர்ந்த கிருஷ்ணன் (38) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 181 மதுபாட்டில்கள், ரூ.9,850 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்