கெங்கவல்லி:-
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் நேற்று தெடாவூர் புத்தூர் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு சபரிமணி (வயது 33) என்பவர் வீட்டில் மது விற்றது தெரிய வந்தது. அதேபோல் மீனவர் தெருவில் ஜோதி (65) என்பவர் மது விற்றதாக கூறப்படுகிறது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.