மது விற்ற 2 பேர் கைது

கோத்தகிரியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-11 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்று காலை கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் திருப்பூர் காங்கேயம் சாலையை சேர்ந்த மாணிக்கம் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் அத்தியூர்மட்டம் பகுதியில் நடத்திய சோதனையில், மதுவிற்றதாக அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (62) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்