மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
சாப்டூர் பகுதியில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்,
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது வண்டாரியை சேர்ந்த மாயன் (வயது75) என்பவர் விற்பனை செய்வதற்காக 8 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதே போல் சென்னம்பட்டியை சேர்ந்த ராஜு (73) என்பவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை சேடபட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.