நாட்டு வெடிகள் வைத்திருந்த 2 பேர் கைது
தேவதானப்பட்டியில் நாட்டு வெடிகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தேவதானப்பட்டி ரைஸ் மில் தெருவில் சந்தேகப்படும்படி 2 பேர் கையில் சாக்குபையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் 34 நாட்டு வெடிகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், தேவதானபட்டியை சேர்ந்த சென்றாயன் (வயது 44), வெள்ளிமலை (54) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.