கோயம்பேடு அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கி தவித்த 2 பேர் பத்திரமாக மீட்பு - தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை
கோயம்பேடு அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கி தவித்த 2 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கோயம்பேடு அடுத்த சின்மயா நகர் பகுதியில் 2 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் அமைந்துள்ள லிப்டில் திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக இருவர் சிக்கி கொண்டதால் நீண்ட நேரமாக வெளியே வர முடியாமல் தவித்தனர்.
பின்னர் இது குறித்து கோயம்பேடு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உடனே விரைந்து வந்த கோயம்பேடு சிறப்பு நியமன அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், லிப்ட்டுக்குள் சிக்கி தவித்த பத்மநாபன் (வயது 42), பிரகாஷ் (40) ஆகிய 2 பேரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பின்னர், ராட்சத எந்திரங்கள் கொண்டு லிப்டின் கதவை அறுத்து லாவகமாக இருவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டுக்குள் சிக்கி நீண்ட நேரமாக போராடிவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.