தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-10-24 19:22 GMT

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் கீழத்தெருவை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 28). கூலி தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனம்உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், மண்ணச்சநல்லூர் அண்ணாமலை நகரை சேர்ந்த முருகன் (6) என்பவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்