கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி உள்பட 2 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி உள்பட 2 பேரை நீடாமங்கலத்தில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-03 18:45 GMT

நெல்லை மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி உள்பட 2 பேரை நீடாமங்கலத்தில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர்.

சோதனை

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நீடாமங்கலம் பூவனூரை சேர்ந்த மாணிக்கம் மகன் ரஜினி என்பவர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் தங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

கொலை வழக்கில் தொடர்பு

விசாரணையில், நெல்லை பாளையங்கோட்டை படப்பக்குறிச்சி காந்தாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் பாபு என்கிற சத்தியபாபு(வயது 32), தென்காசி மாவட்டம் மேலஇலஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமணன் மகன் சூர்யா(21) என்பதும், சத்தியபாபு மீது நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

சத்தியபாபு, தனது நண்பர் சூர்யாவுடன் நீடாமங்கலம் பூவனூரில் தலைமறைவாக தங்கியிருந்துள்ளார்.

2 பேர் கைது

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் ஆயுதங்கள் வைத்திருந்தாக வழக்குப்பதிவு செய்து சத்தியபாபு, சூர்யா அகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 அரிவாள்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சத்தியபாபுவின் பெயர் ெநல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு

சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தனிப்படை மற்றும் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்