விவசாயி உள்பட 2 பேர் படுகாயம்

பெரியகுளத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-19 19:00 GMT

பெரியகுளம் தென்கரை அசன் சந்தை சேர்ந்தவர் ஜாபர் சேட் (வயது 52). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பக்கரை பிரிவு அருகே அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜாபர்சேட்டை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பையா (55). இவர் நேற்று முன்தினம் தேனி-பெரியகுளம் சாலையில் சருத்துப்பட்டி விலக்கு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது லட்சுமிபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பையா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்பையாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்