ரெயில் மோதி ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பலி

ரெயில் மோதி ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-08-17 17:37 GMT

குடியாத்தத்தை அடுத்த கன்னித்தோப்பு பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மகன் சண்முகம் (வயது 34), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் சண்முகம் குடியாத்தம் -வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆம்பூரை அடுத்த காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பவுனம்மாள் (வயது 62). இவர் நேற்று முன்தினம் பச்சகுப்பம் -ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்