மோட்டார் சைக்கிளை திருடி சிறுவன் உள்பட 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளை திருடி சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மண்மங்கலம் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 42). இவரது மோட்டார் சைக்கிளை ராயனூரை சேர்ந்த பிரசாத் (21), வெங்கமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, பிரசாத், 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.