சென்னை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகா் கொலை வழக்கில் சென்னை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-23 18:15 GMT

கலவை

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகா் கொலை வழக்கில் சென்னை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வி.சி.க. பிரமுகர் கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35), விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். இவர், கடந்த 17-ந்தேதி செய்யாத்து வண்ணம் கூட்ரோடு அருகே துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக கடந்த 19-ந்தேதி அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (20), ராஜேஷ் (41) ஆகிய இருவரும் ஆற்காடு கோர்ட்டில் சரணடைந்தனர்.

இந்த கொலையில் தொடர்புடைய சென்னை தாம்பரத்தை சேர்ந்த பரத் (22), சென்னை செம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள்.

பின்னர் அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சதீஷ், ராஜேஷ், பார்த்தசாரதி 3 பேரும் நண்பர்கள். கட்சியில் பார்த்தசாரதி வளர்ச்சி அடைந்ததை பொறுத்துக்கொள்ளாத அவர்கள் 2 பேரும் அவரை கொலை செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த ராஜாவிடம் கூறியுள்ளனர்.

ராஜா, கூலிப்படையான எங்களை (பரத், விக்னேஷ்) தேர்வு செய்தார். அதைத் தொடா்ந்து நாங்கள் மழையூர் கிராமத்திற்கு வந்து பார்த்தசாரதியை எவ்வாறு கொலை வேண்டும் என்று திட்டம் தீட்டினோம்.

கூலிப்படையை ஏவி...

இதனையடுத்து கடந்த 17-ந்தேதி அன்று பார்த்தசாரதியை கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கொலை வழக்கில் கூலிப்படையை ஏவிவிட்ட ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்