காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்

புளியங்குடியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2022-12-30 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி டி.என்.புதுக்குடி பகுதியில் வனச்சரக வனவர்கள் மகேந்திரன், குமார் தலைமையிலான குழு வனக்காப்பாளர்கள் முத்துப்பாண்டி, முருகேசன், அனிதா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியப்பன், தாசன், ஆசீர்வாதம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிந்தாமணியைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 27), புளியங்குடியைச் சேர்ந்த மகேஷ்குமார் (26), ஆகியோர் மோட்டார் சைக்கிளில் காட்டுப்பன்றியை வேட்டையாடி கொண்டு வரும்போது பிடிபட்டனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவுப்படி நபர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 பேருக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்