கால்வாயில் மூழ்கி 2 பேர் சாவு
வெவ்ேவறு பகுதிகளில் கால்வாயில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
குழித்துறை,
வெவ்ேவறு பகுதிகளில் கால்வாயில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மூதாட்டி
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பனம்பழஞ்சிவிளையை சேர்ந்தவர் வேலப்பன் ஆசாரி. இவரது மனைவி வல்சலா (வயது 68). இவர் கடந்த 3 ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த வல்சலா திடீரென மாயமானார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் வல்சலா ஞாறான்விளை பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வல்சலா வீட்டில் இருந்து வெளியேறி அந்த வழியாக சென்றபோது கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது. தொடர்ந்து பிணத்தை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
சுசீந்திரம் அருகே உள்ள சங்கரன்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் என்ற பாண்டி (வயது 64). இவர், சம்பவத்தன்று இரவு சங்கரன்புதூர் பகுதியில் உள்ள நாஞ்சில் புத்தனாறு கால்வாயில் குளிக்க சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்ைல. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் சங்கரன்புதூர் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் படித்துறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பரமேஸ்வரனின் மகன் ரமேஷ்க்கு தெரிவித்தனர். அவர், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரமேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பரமேஸ்வரன் தலையில் காயம் இருந்ததால், அவர் படித்துறையில் இறங்கியபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கருதப்படுகிறது. மேலும், அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.