மர்மமான முறையில் 2 பேர் சாவு

மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் 2 பேர் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-12 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் 2 பேர் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் மர்ம சாவு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் பழனி குருநாதன்(வயது 55). இவர், மங்கைநல்லூர் கடைவீதியில் இரும்பு பட்டறை வைத்து நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பூராசாமி(65). இவர் பழனி குருநாதன் வைத்துள்ள இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் மது குடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர்.

இதை அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணை

மேலும் அவர்கள் மயங்கி கிடந்த பட்டறையில் ஒரு முழு குவாட்டர் பாட்டிலும், காலியான ஒரு குவாட்டர் பாட்டிலும் கிடந்துள்ளது.

அந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய பெரம்பூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்