திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் நேற்று முன்தினம் டீ குடித்துக் கொண்டிருந்த பாபு என்கிற நீலவண்ணன்(வயது 52) திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.