வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த அப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 33). தொழிலாளியான இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சதீஷ் வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி முருகேஷ்வரி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் மாரிமுத்து (22). கூலி தொழிலாளி இவர் மது அருந்திவிட்டு தனது தாயாரிடம் அடிக்கடி தகராறு செய்தார். அதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த மாரிமுத்து கேபிள் ஒயரில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமையா கொடுத்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.