4 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

சேடப்பட்டியில் 4 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-03 19:51 GMT

பேரையூர்,

மதுரை மாவட்டம் சேடப்பட்டி போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக பெரியகட்டளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோட்டம் ஒன்றில் அதே ஊரை சேர்ந்த பூமா என்ற பூவம்மாள் (வயது 61), பணராஜ் (32) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்