பள்ளியை சேதப்படுத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது

கனியாமூர் கலவரத்தில் பள்ளியை சேதப்படுத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது

Update: 2022-09-09 17:28 GMT

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள். இதுவரை 350-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள போலீசார் கலவரம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய சின்னசேலம் தாலுகா தென்பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த இளையபெருமாள் மகன் பரத்(வயது 32), போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட மேலூர் கிராமம் ராஜகோபால்(45) ஆகிய இருவரையும் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்