தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-19 18:42 GMT

விராலிமலை தாலுகா கொடியன்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. இவருக்கு அதே ஊரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சுரேஷ் (வயது 33) என்பவர் அடிக்கடி போன் செய்துள்ளார். இதனால் இளையராஜாவிற்கும், சுரேசுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று சுரேஷின் தாய் அமராவதி மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் தங்களது தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் இளையராஜாவின் வீட்டின் வழியே வந்து கொண்டிருந்தனர். அப்போது இளையராஜா, சுரேஷின் மனைவியிடம் உனது கணவரை கண்டித்து வைத்துக்கொள் என்று கூறியுள்ளார். இதற்கிடையே அங்கு வந்த சுரேசுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளையராஜாவை குத்தியுள்ளார். அப்போது அமராவதி அருகில் இருந்த கட்டையை எடுத்து இளையராஜாவை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ் மற்றும் அமராவதி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்