வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
கோவை செல்வபுரம் சண்முகராஜபுரத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது44). பெயின்டர். இவர், செல்வபுரம் 60 அடி ரோட்டில் உணவு விற்பனை மையம் அருகே நள்ளிரவு 11 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 2 பேர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். அவர் தர மறுத்ததால் சரமாரியாக தாக்கி ரூ.800-ஐ பறித்து சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மரிடம் பணம் பறித்த 15 வயது சிறுவன் மற்றும் விக்கி என்ற விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். சிறுவனை, அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் சேர்த்தனர். விக்கி என்ற விக்னேஷ் மாஜிஸ்திரேட் உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார்.