குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசியை சேர்ந்தவர் ஆறுமுககிருஷ்ணன் என்கிற அலார்ட் (வயது 21), திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாண்டி (25). இவர்கள் 2 பேரும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நிலையில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கலெக்டர் மேகநாதரெட்டிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ஆறுமுககிருஷ்ணன், கணேஷ் பாண்டி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.