ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அலுவலகத்தில்இரும்பு கம்பிகளை திருட முயன்ற 2 பேர் கைது

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அலுவலகத்தில் இரும்பு கம்பிகளை திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-17 18:45 GMT

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை சிலர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஒன்றிய பணியாளர்கள் விரைந்து வந்து, இரும்பு கம்பிகளை வாகனத்தில் ஏற்றிய 2 நபர்களை மடக்கிப்பிடித்து மூஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய தற்காலிக ஊழியரான சிதம்பரம் முத்துமாணிக்கம் தெருவை சேர்ந்த கோமேதகவேல்(வயது 46) மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வாணக்கார தெருவை சேர்ந்த ராஜேஷ்(34) ஆகியோர் என்பதும் ஒன்றிய அலுவலக பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து ஒன்றிய அலுவலக உதவி பொறியாளர் அனுஷாதேவி முருகபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்