கோவில் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது

கோவில் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-09-06 20:49 GMT

பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டி கிராமத்தில் புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 2 பேர் அங்குள்ள பொருட்களை திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் கோவிலில் திருட முயன்றதை கண்டு கூச்சலிட்டார். உடனே கோவிலில் திருட முயன்ற 2 பேர் வெளியே ஓடி வந்தனர். அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்களை விரட்டிச் சென்று ராயமுண்டான்பட்டி புதுத்தெருவில் மடக்கிப் பிடித்து பூதலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்களில் ஒருவர் திருச்சி துவாக்குடி பெரியார் நகரை சேர்ந்த சிவபாலகணேஷ் (27), மற்றொருவர் திருவெறும்பூர் காவேரி நகரை சேர்ந்த நாகராஜ் (21) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ராமராஜன் கொடுத்த புகாரின்பேரில் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்